மத்தேகொடயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மத்தேகொடயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

மத்தேகொடயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2016 | 1:06 pm

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மத்தேகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (29) காலை கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வாடகை வீட்டில் தங்கியிருந்தவர் எனவும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை கற்பித்து வந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த பெண்ணின் சொந்த பதிவுகள் தொடர்பில் தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மரண விசாரணையும் முன்னெடுக்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்