நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று கிளிநொச்சியில்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று கிளிநொச்சியில்

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2016 | 12:59 pm

நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் மற்றுமொரு அமர்வு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று (29) காலை 9 மணியளவில் மக்களின் கருத்தறியும் அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்றும் நாளையும் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு நாளை மறுதினம் (31) ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும், 4 ஆம் திகதி வெலிஓயா பிரதேச செயலகத்திலும் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்