தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

29 Jul, 2016 | 12:05 pm

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல தமிழ் – சிங்கள பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்றுடன் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக இந்த பாடசாலைகள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் யாவும் நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக கடந்த ஜூன் மாதம் 6ஆம் திகதி மூடப்பட்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

முஸ்லிம் பாடசாலைகளில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் இரண்டாம் தவணைப் பரீட்சை நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்