சிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி!

சிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி!

சிறு தீவினையும், சுற்றுலா விடுதியையும் 7000 ரூபாவுக்கு வாங்கிய அதிர்ஷ்டசாலி!

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 4:21 pm

பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மைக்ரோனீசியா நாட்டைச் சேர்ந்த சிறு தீவினையும் அங்குள்ள சுற்றுலா விடுதியையும் வெறும் 49 டொலர்களைக் கொடுத்துப் பரிசாகப் பெற்றுள்ளார் ஜோஷூவா எனும் நபர்.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து 3,800 கி.மீ. தொலைவில் உள்ள பசுமையான தீவில் ( island of Kosrae) குகைகள் நிறைந்த குன்றுகள், நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.

இந்த அழகிய தீவை 1992 இல் டக்ளஸ் பெய்ட்ஸ், அவரது மனைவி ஸாலி பெய்ட்ஸ் ஆகியோர் வாங்கி, அங்கு சுற்றுலா விடுதியொன்றை அமைத்தனர்.

சுமார் 25 வருடங்களில் அப்பகுதியை வெற்றிகரமான சுற்றுலாத்தலமாக மாற்றினர்.

சம்பாதித்தது போதும் என்று முடிவு செய்த அந்த தம்பதியர், அதனை விற்க முடிவு செய்தனர்.

பணத்தை நேசிப்பவரைவிட, தீவு வாழ்க்கை, இயற்கையை நேசிப்பவருக்கு அதை விற்க முடிவு செய்து, ஒரு லொட்டரித் திட்டத்தை அறிவித்தனர்.

ஒரு டிக்கட் விலை 49 டொலர்கள் (7000 ரூபா) என நிர்ணயிக்கப்பட்டது.

தீவுப் பரிசை வெல்ல 150 நாடுகளில் 75,485 பரிசுச் சீட்டுகள் விற்பனையாகின.

அவுஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோஷுவா என்ற நபருக்கு பரிசுக் குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தது.

ஜோஷுவா என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்