ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 9:57 pm

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவினை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வரக்காப்பொல ஆதார வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் போது தெதிகம மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊழல்வாதிகள் மற்றும் குண்டர்களை விரைவில் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தெதிகம பாதுகாப்பு அமைப்பு இன்று உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல பிரதேச சபைக்கு முன்பாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 9 மணியளவில் உண்ணாவிரதம் ஆரம்பமானது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு முன்பாகவுள்ள வீதியூடாக நாளை பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை வரக்காப்பொல நகருக்குள் பிரவேசிப்பதைத் தவிர்க்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் இன்று வரக்காப்பொல நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்