பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேருக்கு அழைப்பாணை விடுக்குமாறு கோரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேருக்கு அழைப்பாணை விடுக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 9:28 pm

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தின் கட்டளை மீறப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை பொலிஸாரால் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றக் கட்டளையை மீறி செயற்பட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேருக்கு அழைப்பாணை விடுக்குமாறு பொலிஸாரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பில் ஆராயும் பொருட்டு, இந்த வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன ஒத்திவைத்துள்ளார்.​

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்