ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று நெலும்தெனியவில் நிறைவு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று நெலும்தெனியவில் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 7:33 pm

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை இன்று முற்பகல் மாவனெல்லை, உத்துமன்கந்த பகுதியில் ஆரம்பமாகி வரக்காப்பொல நெலும்தெனிய பிரதேசத்தில் முடிவடைந்தது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாத யாத்திரை நேற்று (28) பேராதனையில் ஆரம்பமாகி, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மாவனெல்லை நகருக்குள் பிரவேசிக்காமல் கனேதென்ன பிரதேசத்தில் முடிவடைந்தது.

தடை விதிக்கப்பட்டுள்ள எல்லையைத் தாண்டி உத்துமன்கந்த பகுதியில் இரண்டாம் நாள் பாத யாத்திரை இன்று ஆரம்பமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

கடும் மழை காரணமாக ஒரு மணித்தியாலம் தாமதமாகி கனேதன்ன பகுதியில் இருந்து பாத யாத்திரை மீண்டும் ஆரம்பமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்