அம்பேகமுவ பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க ”மக்கள் சக்தி” திட்டம்

அம்பேகமுவ பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க ”மக்கள் சக்தி” திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2016 | 8:50 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக, மெலிபன் பால் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து நியூஸ்பெஸ்ட், தனமல்வில அம்பேகமுவ இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

ஜூலை மாதம் 11 ஆம் திகதி மக்கள் சக்தி குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இத்திட்டத்துடன் மெலிபன் பால் உற்பத்தி நிறுவனம் இணைந்துகொண்டது.

தனமல்வில – அம்பேகமுவ இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

அப்பகுதியிலிருந்து கிடைக்கும் நீரை அருந்துவதனால் பலருக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

இதனால், கிணற்றிலிருந்து கிடைக்கும் நீரை சுத்தப்படுத்துவதற்கு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பொன்று அமைக்கப்படவுள்ளது.

பாடசாலை விடுமுறையின் பின்னர் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் மாணவர்களுக்கு சுத்தமான நீரைப் பருகுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

அத்துடன், இந்த பாடசாலையின் வாசகசாலைக்கு புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்