மூதூரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்

மூதூரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 9:42 pm

திருகோணமலை – மூதூர் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று மூதூர் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்