பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடரும் வேலை நிறுத்தம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடரும் வேலை நிறுத்தம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொடரும் வேலை நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2016 | 10:13 am

பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்கள் நேற்று முன்னெடுத்த வேலை நிறுத்தம் இன்றைய தினமும் தொடர்கின்றது.

அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவினை சம்பளத்தில் இணைத்து கொள்ளாமைக்கு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.

இவர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமையினால் இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல்கலைக்கழங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

தமது கோரிக்கைக்கு தீர்வு கிட்டும் வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பொருளாலர் கே.எல்.டீ.ஜீ ரிச்மன்ட் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்