நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை கனடா பாராட்டியுள்ளது

நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை கனடா பாராட்டியுள்ளது

நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை கனடா பாராட்டியுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 6:16 pm

இலங்கையில் நீதிக் கட்டமைப்பை வலுப்படுத்தி, நிலையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை கனடா பாராட்டியுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டெஃபன் டியோன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் அபிவிருத்திக்காக கனடாவின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு இணக்கம் தெரிவித்த கனேடிய வெளிவிவகார அமைச்சர், சூரிய எரிசக்தி திட்டத்திற்கான உதவியைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அதேபோன்று, சிறியளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சணச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து கைத்தொழில் அபிவிருத்தித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்