துணுக்காயில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு

துணுக்காயில் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 8:40 pm

நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று காலை முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

துணுக்காய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமான இந்த அமர்வு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது.

இன்றைய இந்த அமர்வில் பலரும் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணியின் மக்களின் கருத்தறியும் அமர்வு நாளை மறுதினம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலும் 4 ஆம் திகதி வெலிஓயா பிரதேச செயலகத்திலும் மக்கள் கருத்தறியும் அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்