கியூலே கிராம மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுக்க நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி” திட்டம்

கியூலே கிராம மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக்கொடுக்க நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி” திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 10:08 pm

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்கும் குடிநீரில் ஏதாவது கழிவுப்பொருள் கலந்திருந்தால் என்ன செய்வீர்கள்?

அந்த நீரை பிள்ளைகளுக்கு வழங்காமல் சுத்தமான நீரை அல்லவா வழங்குவீர்கள்?

எனினும், தணமல்வில – கியூலே கிராம மக்கள் சுமார் 80 வருடங்களாக சேறு கலந்த நீரையே பருகுகின்றனர்.

அவர்களுக்கு சுத்தமான நீரை வழங்குவதற்கான நடவடிக்கையை நியூஸ்பெஸ்ட் மேற்கொண்டுள்ளது.

மக்களுடன் இணைந்து மக்களுக்காக முன்னெடுக்கப்படும் ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தின் ஊடாக இந்த கிராமத்திற்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு நியூஸ்பெஸ்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்