சோம்பியிருப்போரால் பொருளாதாரத்திற்குக் கேடு: ஆய்வாளர்கள் தெரிவிப்பு

சோம்பியிருப்போரால் பொருளாதாரத்திற்குக் கேடு: ஆய்வாளர்கள் தெரிவிப்பு

சோம்பியிருப்போரால் பொருளாதாரத்திற்குக் கேடு: ஆய்வாளர்கள் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 4:17 pm

தினமும் உடற்பயிற்சி செய்யாதவர்கள் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டொன்றுக்கு 67 பில்லியன் டொலர்களுக்கும் மேல் செலவு வைக்கின்றார்கள் என்று ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சோம்பியிருப்பதால் உலகின் சுகாதார செலவீனங்களில் 2013 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 54 பில்லியன் டொலர்களும் இழந்த உற்பத்தித் திறனால் சுமார் 13 பில்லியன் டொலர்களும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ சஞ்சிகையான ‘லேன்செட்’ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓடியாடி சுறுசுறுப்பாக இல்லாமல், உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறைகளால் ஆண்டொன்றுக்கு சுமார் 5 மில்லியன் இறப்புகள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமும் ஒரு மணி நேர சுறுசுறுப்பான உடற்பயிற்சி தேவை என அவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள உடற்பயிற்சி நேரத்தை விட சுமார் மூன்று மடங்கு அதிகமானது.

சோம்பி இருப்பது என்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் பொருளாதாரச் சுமை, ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குத் தடையாய் இருக்கிறது என்றும் மிக மேம்பட்ட சுகாதார அமைப்புகள் உள்ள செல்வந்த நாடுகள் கூட இந்தப் பிரச்சினைக்கு அதிக விலை தரவேண்டியிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்