கனடா வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் இன்று சந்திப்பு

கனடா வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் இன்று சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2016 | 8:34 am

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திக்கவுள்ளார்.

நேற்று மாலை நாட்டிற்கு வருகை தந்த கனடா வெளிவிவகார அமைச்சரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.

13 வருடங்களுக்கு பின்னர் கனடா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டெபன் டியோன் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்டெபன் டியோன் நாளைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்