ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முதலாம் நாள் பாதயாத்திரை மாவனெல்லையில் நிறைவு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முதலாம் நாள் பாதயாத்திரை மாவனெல்லையில் நிறைவு

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 8:15 pm

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முதலாம் நாள் பாதயாத்திரை இன்று பேராதனையில் ஆரம்பமாகி மாவனெல்லை – கனேதன்ன பிரதேசத்தில் நிறைவடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முதலில் கெட்டம்பே விஹாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பின்னர் கண்டி நகரைத் தாண்டி, பேராதனை – மகாவலி கங்கை பாலத்திற்கு அருகில் எதிர்ப்புப் பேரணியை ஆரம்பித்தனர்.

மாவனெல்லை – கனேதன்ன பகுதியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணியின் இன்றைய பயணம் நிறைவுற்றது.

அங்கு பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, கெட்டம்பே விஹாரைக்கு முன்பாகக் கூடியிருந்த பேரணியில் கலந்துகொண்ட சிலர், அந்த வீதி ஊடாகப் பயணித்த அம்பியூலன்ஸ் வண்டியில் நோயாளர்கள் இல்லை என தெரிவித்து அமைதியற்ற முறையில் செயற்பட்டனர்.

இதன்போது அம்பியூலன்ஸ் வண்டிக்கு தாக்குதல் மேற்கொண்டதாக, வண்டியின் சாரதி பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்