ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாதயாத்திரை கெட்டம்பே நகரில் இன்று ஆரம்பம்

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாதயாத்திரை கெட்டம்பே நகரில் இன்று ஆரம்பம்

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் பாதயாத்திரை கெட்டம்பே நகரில் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2016 | 9:58 am

ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் பாதயாத்திரை கெட்டம்பே நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான பல கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிக வரி அறவிடப்பட்டு மக்களின் மீது சுமையை திணித்தல் , பாராளுமன்ற அனுமதியின்றி உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் காலத்தை நீடித்துச் செல்லுதல், நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடல் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊடக அடக்கு முறை மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் என்பனவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கட்சியினை பிளவுப்படுத்துவதற்கே இந்த பாதயாத்திரை திட்டமிடப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை படுதோல்வியடைய செய்வதற்கான பாரிய சூழ்ச்சியாகவே இந்த பாதயாத்திரை திட்டமிடப்பட்டுள்ளமை தெளிவாக விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியை பிளவுப்படுத்தப்போவதில்லை என தெரிவித்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் இவ்வாறானதொரு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை மிகவும் கீழ்தரமான செயல் எனவும் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிளவுப்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்