இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  வெளிநாட்டு நாணயங்கள் சென்னையில் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  வெளிநாட்டு நாணயங்கள் சென்னையில் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  வெளிநாட்டு நாணயங்கள் சென்னையில் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

28 Jul, 2016 | 12:59 pm

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயம் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி நேற்றிரவு பயணிப்பதற்கு தயாரான விமானமொன்றில் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய, விமான நிலைய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்போது பயணியொருவரின் பயணப்பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 60 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்களும், யூரோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பயணத்திற்கும், சென்னை விமான நிலைய அதிகாரிகாரிகளுக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்