இரண்டு நிறுவனங்களை முறையற்ற விதத்தில் ஈட்டிய பணத்தினால் வாங்கியதாக நாமல் மீது குற்றச்சாட்டு

இரண்டு நிறுவனங்களை முறையற்ற விதத்தில் ஈட்டிய பணத்தினால் வாங்கியதாக நாமல் மீது குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2016 | 8:22 pm

எயார் லங்கா நிறுவனத்திற்கு சேவை வழங்கும் ஹலோ கோப் மற்றும் கவர்ஸ் கேட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை முறையற்ற விதத்தில் ஈட்டிய பணத்தின் மூலம் கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஆறு பேர் இன்று சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ஸவுடன் இந்திக்க பிரபாத் கருணாஜீவ, பவித்ரா சுஜானி போகொல்லாகம, நித்திய சேனானி சமரநாயக்க, பட்டபொல ஆராச்சிகே இரேஷா டி சில்வா, சுதர்ஷன பண்டார கனேகொட ஆகியோர் இந்த சம்பவத்தின் ஏனைய சந்தேகநபர்கள் ஆவார்கள்.

குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களையும், முறையற்ற விதத்தில் ஈட்டிய பணத்தினால் சந்தேகநபர்கள் கொள்வனவு செய்துள்ளதால், நிதித் தூய்தாக்கல் தடைச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்