போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பொலிஸார் உரிய முறையில் செயற்படுவதில்லையென முறைப்பாடு

போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பொலிஸார் உரிய முறையில் செயற்படுவதில்லையென முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2016 | 8:15 pm

போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பொலிஸார் உரிய முறையில் செயற்படுவதில்லையென தெரிவித்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேரத்ன இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

நகரங்களை அண்மித்த பகுதியில் நிலவும் கடும் வாகன நெரிசல் காரணமாக நாளாந்தம் சில பஸ் பயணங்களை இரத்து செய்ய நேரிட்டுள்ளமையால் பாரிய நட்டம் ஏற்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் பஸ் சாரதியொருவர் வீதியில் நடந்துகொண்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் பிரசித்தி பெற்றுள்ள வீடியோ ஒன்று தொடர்பில் நியூஸ்பெஸ்ட், கெமுனு விஜேரத்னவிடம் வினவியது.

அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாக இருந்தால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தாம் தலையிட்டு அவர்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்து, பணி நீக்கம் செய்வதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்