மற்றுமொரு இலங்கை பெண்ணை பாடகியாக அறிமுகப்படுத்திய இமான்

மற்றுமொரு இலங்கை பெண்ணை பாடகியாக அறிமுகப்படுத்திய இமான்

மற்றுமொரு இலங்கை பெண்ணை பாடகியாக அறிமுகப்படுத்திய இமான்

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2016 | 12:20 pm

உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

இலங்கை தமிழ் மக்கள் இசை, நடனம், போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் ஆவர். ஏற்கனவே தமிழ் திரையுலகில் சூப்பர்சிங்கர் மூலம் கனடாவைச் சேர்ந்த இலங்கை பெண்ணான ஜெசிக்கா தமிழர்களிடையே பிரபலமானார்.

தற்போது கனடாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணான லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் பிரபல இசையமைப்பாளரின் இசையில் பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவில் புதிய குரல்களை அறிமுகப்படுத்தி வரும் டி.இமான் தான். இவர் ஏற்கனவே தன்னுடைய இசையில் சாட்டை படத்தில் கனடாவில் இலங்கை பெண்ணான எலிசபெத்துக்கு வாய்ப்பு தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள போகன் திரைப்படத்தில் தான் லக்ஷ்மி பின்னணி பாடகியாக அறிமுகமாகவுள்ளார்.

குரல் பதிவிற்காக சென்னை சென்றிருந்த லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் 24 ஆம் திகதி குரல் பதிவினை முடித்து டொரான்டோ சென்றுள்ளார். டி.இமான் அவர்களின் இசையில் பாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்