இலங்கை அணியுடனான போட்டி என்பதனாலேயே 10 நாட்கள் மாத்திரம் பயிற்சி வழங்க ஒப்புக்கொண்டேன்

இலங்கை அணியுடனான போட்டி என்பதனாலேயே 10 நாட்கள் மாத்திரம் பயிற்சி வழங்க ஒப்புக்கொண்டேன்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:47 pm

முத்தையா முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக செயற்படுகின்றமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக முத்தையா முரளிதரன் செயற்படுகின்றார்.

இந்த போட்டித்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரான காலப்பகுதிக்காக மாத்திரம் இந்த பதவியை தாம் ஏற்றுக் கொண்டதாக இன்று ஸ்போட்ஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.

முத்தையா முரளிதரன்

[quote]மூன்று மாதங்களுக்கு முன்னர் முடியுமா என கேட்டார்கள். 10 நாட்களுக்கு மாத்திரம் முடியும் எனவும் போட்டிகளில் பயிற்சியளிக்க முடியாது எனவும் கூறினேன். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியினரின் ஓய்வு அறையில்
இருக்க முடியாது என்பதால் நான் போட்டிகளின்போது பயிற்சியளிக்க முடியாது என கூறினேன். போட்டிக்கு முன்னரான தயார்படுத்தலுக்கு பயிற்சியளிக்க முடியும் என தெரிவித்தேன்.[/quote]

திலங்க சுமதிபால

[quote]எமது தனித்துவம் மற்றும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினையே இங்குள்ளது. வோர்ன் – முரளி தொடர் என நாம் பெயரிட்டுள்ளோம். இரண்டு நாடுகளுக்காகவும் இருந்த சந்தர்ப்பத்தையே நான் முரளிக்காக ஒதுக்கியுள்ளோம். தமது ஊரில் இலங்கை அணிக்கு எதிராக பயிற்சியளிப்பது தொடர்பில் முரளி சுய மதிப்பீட்டில் ஈடுபட வேண்டும். தொழில்சார் விடயம் ஒருபுறம் இருக்க இந்த செயற்பாடு எமக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.[/quote]

முத்தையா முரளிதரன்

[quote]இவர்கள் திறமையான பயிற்சியாளர்களை பயன்படுத்துவதில்லை. அனைவரையும் வெளியிலிருந்து அழைத்து வருகின்றனர். இலங்கையிலிருப்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கவும் மாட்டார்கள். அவ்வாறு செயற்படுபவர்கள், நாம் வேறு அணிகளுக்கு பயிற்சியளிப்பது சிறந்தது அல்லவென நினைக்கின்றனர். 10 நாட்கள் பயிற்சியளித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்ய முடியுமாயின், உலகிலேயே தலைசிறந்த பயிற்றுவிப்பாளர் நான் ஆவேன். எனது அனுபவம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. தமது தவறுகளை மறைத்துக் கொள்வதற்ககாக எம்மைப்போன்வர்களை பயன்படுத்த இவர்கள் முனைகின்றனர்.[/quote]

திலங்க சுமதிபால

[quote]மிகவும் கவலையாகவுள்ளது. நாம் சிரமப்பட்டு பாதுகாத்த வீரராவார். நாம் அவரை மூன்று சந்தர்ப்பங்களில் காப்பாற்றியுள்ளோம். முரளி தற்போது முன்னாள் வீரர் மாத்திரமே. அவுஸ்திரேலியாவை வீழ்த்துவதற்காக நாம் எமது அணியை தயார்படுத்துவோம்.[/quote]

முத்தையா முரளிதரன்

[quote]உண்மையிலேயே இலங்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தவறான புரிதலுடன் செயற்பட்ட சந்தர்ப்பத்திலும் நான் இலங்கை மக்களுக்காக முன் நின்றேன். எனது கடினமான காலகட்டத்தில் எனக்கு உதவியதால், நான் ஏதேனும் செய்ய வேண்டுமென நினைத்தேன். நாம் வருடம்தோறும் 50,000 குடும்பங்களுக்கு இலவச உதவிகளை வழங்குகின்றோம். நான் எதிரான செயலில் ஈடுபடவில்லை. இதனை சிறந்த சந்தர்ப்பமாகவே நான் கருதுகின்றேன். ஏனெனில் நான் பந்தை எறிவதாக 95ஆம் ஆண்டிலும் 99ஆம் ஆண்டிலும் அவர்களே குற்றம் சுமத்தினார்கள். இன்று பயிற்சியளிக்க முடியுமா என அவர்களே கேட்கின்றனர். இதனடிப்படையில் அவர்கள் தமது தரப்பு இழைத்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதன் காரணமாகவே நான், அந்த
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டேன்.[/quote]

திலங்க சுமதிபால

[quote]தம்மை திட்டியதாக சரித் சேனாநாயக்க முறைப்பாடு செய்துள்ளார். விளையாட்டரங்கில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விடயங்கள் தொடர்பில் நாம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிருவாகத்திற்கு அறிவித்துள்ளோம். அவ்வாறு இடம்பெற்றிருக்ககக்கூடாது.[/quote]

முத்தையா முரளிதரன்

[quote]அங்கிருந்த அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டிருக்கலாம். கேட்க முடியும். உண்மையிலேயே அத்தகையவொரு சம்பவம் இடம்பெறவில்லை. நான் அவ்வாறு செய்ததாக அவர் கூறிக்கொண்டு திரிகின்றார். அவரை சந்தித்தபோது நான் கேட்டேன். விசாரணை இருப்பதாக அவர் கூறினார். திலங்கவும் குற்றச்சாட்டு சுமத்துவதற்கு முன்னர் என்னிடம் கேட்டிருக்கலாம். இல்லாவிட்டால், ”கியூரேட்டரிடம்” கேட்டிருக்கலாம்.[/quote]

இது தொடர்பில் சரித் சேனாநாயக்கவிடம் நான் வினவியபோது, விசாரணை இடம்பெற்று வருவதால் கருத்து வெளியிட முடியாது என கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்