வெலிக்கடை படுகொலைச் சம்பவ நினைவு தினம் யாழில் இன்று இடம்பெற்றது

வெலிக்கடை படுகொலைச் சம்பவ நினைவு தினம் யாழில் இன்று இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:24 pm

வெலிக்கடை படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் முகமாகவும் சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் ஆத்மசாந்தி வேண்டியும் யாழ்ப்பாணத்தில் இன்று பிரார்த்தனை நடைபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைகளை அடுத்து யாழ். பெரிய கோவில் தேவாலயத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த பிரார்த்தனையில் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்