யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 9:49 am

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (25) மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

கலை பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (25) ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, ஏனைய வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முகாமைத்துவ பீடத்தின் முதலாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கூறியுள்ளார்.

விஞ்ஞானபீடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடைவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்