களுகங்கை செயற்றிட்டத்தின் புதையற் பொருட்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு

களுகங்கை செயற்றிட்டத்தின் புதையற் பொருட்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு

களுகங்கை செயற்றிட்டத்தின் புதையற் பொருட்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:31 am

மொரகஹகந்த – களுகங்கை செயற்றிட்டத்தின் புதையற் பொருட்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹவெலி திட்டத்திற்கு உரித்தான பஞ்ச வாவிகளில் இறுதியாக மொரகஹகந்த வாவி கருதப்படுகின்றது.

இந்த செயற்திட்டமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடிக் கண்காணிப்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த செயற்றிட்டம் காரணமாக சொந்த காணிகளை இழக்கும் மக்களுக்கு விசேட செயன்முறையினூடாக நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

புதிய நட்டஈட்டு செயன்முறையூடாக லக்கல,பல்லேகம மற்றும் நாஉல பிரதேச செயலகப்பிரிவுகளில் வசிக்கும் குடும்பங்கள் மற்றும் மாதிரிக் குடும்பங்கள் 2200 இற்கு அரச மதிப்பீட்டு பெறுமதியை விட அதிகமாக நட்டஈடு வழங்கப்படுமென மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுர திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் இந்த நட்டஈட்டு நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதியால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசணை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார விடயங்கள் தொடர்பிலான அமைச்சரவையின் உப குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னர் நட்டஈடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்