மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:40 am

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவனே நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதான பிரசாந்தன் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளியில் நேற்று கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று நடத்தபடவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று முன்னெடுக்கப்பட்ட நீதவான் விசாரணைகளின் பின்னர் மூன்று சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை மற்றும் குழந்தையின் தாயான 24 வயதுடைய பெண் ஆகியோரது சடலங்கள் காக்காச்சிவட்டை பகுதியிலுள்ள வீட்டின் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட பெண் மற்றும் குழந்தையின் தலையில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் 55 வயதான தந்தை கடும் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்