மக்கள் சக்தி 100 நாட்கள்: வடமட மக்களுக்கான சனசமூக நிலையம்

மக்கள் சக்தி 100 நாட்கள்: வடமட மக்களுக்கான சனசமூக நிலையம்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:21 pm

மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக அரசியல்வாதிகள் உறுதி வழங்கி அவை நிறைவேற்றப்படாத நிலையில் மக்களின் பிரச்சினைகளை தீரப்பதற்கு மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தமனயாய அலகொவெவ வீதியை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இரண்டரை கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த வீதியில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரையான கால்வாய்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் தற்போது நிறைவுபெற்றுள்ளதுடன் ஏனைய பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தமது கிராமத்திற்கு போக்குவரத்து செய்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்ட இந்த மக்களின் பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்கவுள்ளது.

இதுபோல விவசாயத்தை நம்பி வாழும் ஹம்பேகமுவ, வடமட மக்கள் சனசமூக நிலையம் ஒன்று இன்மையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இப்பகுதியில் இருந்த சனசமூக நிலையம் இன்று இவ்வாறு காணப்படுகிறது.

இதனை புனரமைத்தருவதாக அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் கூறிவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இதுவரை எந்தவிதமான புனரமைப்பு நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்