பாடசாலை நேரத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு அதிபர்களே பொறுப்பு – இளஞ்செழியன்

பாடசாலை நேரத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களுக்கு அதிபர்களே பொறுப்பு – இளஞ்செழியன்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:41 pm

யாழ். மாவட்ட அதிபர்களுக்கான, பாடசாலை சட்டம் குறித்த அறிவுறுத்தல் கூட்டம் இன்று நடைபெற்றது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாடசாலை நேரத்தில் ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின், அதற்கு முதலில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதிபர்கள் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது தெரிவித்தார்.

சமுதாயம் திருந்தவேண்டுமானால் தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்