எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் வெடிப்பு: சீர்செய்யும் நடவடிக்கை தாமதம்

எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் வெடிப்பு: சீர்செய்யும் நடவடிக்கை தாமதம்

எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் வெடிப்பு: சீர்செய்யும் நடவடிக்கை தாமதம்

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 9:22 am

கொழும்பு துறைமுகத்தில் இருந்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரை எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை சீர்செய்யும் நடவடிக்கை கடற்கொந்தளிப்பு காரணமாக தாமதமடைந்துள்ளது.

நேற்று முன்தினம் பிற்பகல் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில், மசகு எண்ணெய் இறக்குவதற்காக
பயன்படுத்தப்படும், மிதவையுடன் இணைக்கப்பட்டுள்ள மூன்று குழாய்களில் ஒன்றிலே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

குழாய் வெடிப்பினை சீர்செய்யும் நடவடிக்கை நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தொடர்ந்தும் சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்ப்பட்டுவருவதாகவும் இலங்கை பெற்றோலிய தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.

இந்த குழாய் வெடிப்பு காரணமாக நாடுபூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜீ.ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து எரிபொருளை கொண்டு செல்லும் குழாய் கட்டமைப்பினை புதிதாக நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்