இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நாமல் ராஜபக்ஸ அவமதித்ததாக நீதிமன்றில் மனு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நாமல் ராஜபக்ஸ அவமதித்ததாக நீதிமன்றில் மனு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை நாமல் ராஜபக்ஸ அவமதித்ததாக நீதிமன்றில் மனு

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 8:28 pm

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்ததாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி ஆராய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

பிரதம நீதியரசர் கே ஶ்ரீபவன் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

பிரதிவாதிக்கு இது தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நாமல் ராஜபக்ஸ சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அனைத்து ஆவணங்களையும் பிரதிவாதிக்கு வழங்க வேண்டிய தேவையில்லையென இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜனாதிபதி தில்ருக் ஷி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஸவினால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள மற்றும் அது தொடர்பில் வாக்குமூலம் வழங்க வருமாறு விடுத்த அழைப்பை அவர் புறக்கணித்தமையினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்ததாக மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்