இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 9:11 am

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 73 பேரை விடுதலை செய்வதற்கான,அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மீ்ன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 73 மீனவர்களையும் நீதிமன்றத்தினூடான விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தான் அமைச்சராக பொற்றுப்பேற்றதன் பின்னர் கைப்பற்றப்பட்ட படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளாதகவும், இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இந்திய மீனவர்கள் வடபகுதி கடலில் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் வெளியாகிய செய்தியை நிராகரிப்பதாகவும் அவ்வாறான அனுமதியை வழங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்