அரச பொருளாதார மத்திய நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை

அரச பொருளாதார மத்திய நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை

அரச பொருளாதார மத்திய நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 11:05 am

அரச பொருளாதார மத்திய நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்கள் விற்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுமார் 7 பொருட்கள் நிர்ணய விலையில் விற்கப்படுவதில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே குறிப்பிட்டுள்ளார்.

நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கே அரச பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் கண்காணிப்பதில்லை எனவும் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வர்த்தக விவகார இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசாவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

தவறான முறையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்யாதவர்கள் தொடர்பில் கண்காணிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசா கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்