அமெரிக்கா, ஜப்பான், ஓமான் நாடுகளின் 4 யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்கா, ஜப்பான், ஓமான் நாடுகளின் 4 யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

அமெரிக்கா, ஜப்பான், ஓமான் நாடுகளின் 4 யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

25 Jul, 2016 | 11:40 am

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் 4 யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அமெரிக்காவின் நிவ் ஓர்லின்ஸ் என்ற யுத்தக் கப்பலொன்று சுற்றுலாவிற்காக நேற்று (24) இலங்கையை வந்தடைந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வமாக நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் 6 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிவ் ஓர்லின்ஸ் கப்பலானது கடற்படையினரின் பயிற்சிக்காகவும் குறித்த காலப்பகுதியில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜப்பானிலிருந்து இனசுமா மற்றும் சுசுட்சுகி ஆகிய இரண்டு கப்பல்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமூக உறவை மேலும் வளப்படுத்தும் நோக்கில் கொழும்பு துறைமுகத்தை நேற்று (24) வந்தடைந்துள்ளன.

மேலும், ஓமான் கடற்படையிலிருந்து காசெப் என்ற கப்பலொன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்