மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு இலங்கை இந்திய அரசுகள் முன்வர வேண்டும் – தமிழக மீனவர்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2016 | 12:39 pm

மீனவர் பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வு காண்பதற்கு இலங்கை இந்திய அரசுகள் முன்வர வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக கரையோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஜெசுதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தங்களின் வாழ்வாதாரமான படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஷ்வரம் மீனவர்களால் ஆரம்பிக்கப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பி.ஜெசுதாஸ் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்