மட்டக்களப்பில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை

மட்டக்களப்பில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை

மட்டக்களப்பில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2016 | 11:44 am

மட்டக்களப்பு காக்காச்சிவட்டை பகுதியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒன்றறரை வயது குழந்தை உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் 55 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கொலை செய்யப்பட்டிருக்ககூடும் என சந்தேகிக்கப்படும் இரண்டு சடலங்கள் கிணற்றுக்குள் காணப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.

ஒன்றரை வயது பெண் குழந்தையுடையதும் தாயுடையதும் சடலலமே கிணற்றில் காணப்பட கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.

காக்கச்சிவட்டை பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வௌ்ளாவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்