சீனாவில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் வௌ்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2016 | 12:28 pm

சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கில் சிக்கி 150 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளதாகவும் சீன ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவின் ஹெபெய் மற்றும் ஹெனன் மாகாணங்களே வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹெபெய் மாகாணத்தில் மாத்திரம் 114 பேர் உயிரிழந்துள்ளதுடன் 111 பேர் காணமற்போயுள்ளனர்.
அத்துடன் 53,000 வீடுகள் சேதமடந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சிங்டாய் நகரில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமக்கு அரசாங்கத்தினால் உரிய விதத்தில் வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வௌ்ளத்தினால் 1.5 மில்லியன் ஹெக்டேயர் பயிர் நிலங்கள் நாசமாகியுள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்