சப்புகஸ்கந்தைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை திருத்தும் பணிகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2016 | 10:32 am

சப்புகஸ்கந்தைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை திருத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து சப்புகஸ்கந்தைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் நேற்றிரவு வெடிப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து எரிபொருள் கொண்டு செல்லும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஊழல் மோசடிகளின் பிரதிபலனாக குறித்த குழாயில் அடிக்கடி வெடிப்பு ஏற்படுவதாக தேசிய சேவையாளர்கள் சங்கத்தின் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குழாயினை மாற்றியமைப்பதற்கு புதிய குழாய்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்