கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல்

கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல்

கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

24 Jul, 2016 | 9:22 am

கடந்தகாலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மேல்நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர்களால் சமர்ப்பிக்க அறிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்தியதன் பின்னர் இந்த வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான மேலும் 30 அறிக்கைகளை சட்ட மாஅதிபர் திணைக்கள அதிகாரிகளால் பரிசீலனைக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பரிசீலனைக்கு நிபுணத்துவம் வாய்ந்த விசேட சட்டத்தரணிகளை சேவையில் இணைத்துக் கொண்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விசாரணைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதாகவும் சட்ட மாஅதிபர் கூறியுள்ளார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சுயாதீன தன்மைக்கேற்ப குறித்த அறிக்கைகள் விசாரணைக்குட்டபடுத்தப்படுவதாகவும் சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்