வசீம் தாஜூடீன் கொலை: அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

வசீம் தாஜூடீன் கொலை: அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Jul, 2016 | 9:45 pm

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதவிர வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவையும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்