சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லும் மற்றுமொரு மார்க்கம் வெளியானது

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லும் மற்றுமொரு மார்க்கம் வெளியானது

எழுத்தாளர் Bella Dalima

19 Jul, 2016 | 8:44 pm

சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படும் மற்றுமொரு மார்க்கம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சிறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கஞ்சா சுருட்டொன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதான ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்
தெமட்டகொட பகுதியில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவிற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபரை சிறைச்சாலைக்குள் அழைத்துச் செல்லும்போது ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய அவரை சோதனையிட்ட
சந்தர்ப்பத்தில் 4760 மில்லி கிராம் ​ஹெரோய்னும் 29,300 மில்லிகிராம் கேரளக் கஞ்சாவும் போதைப்பொருள் வில்லையொன்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைக்காக சந்தேநபர் பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்