ஹப்புத்தளையில் ரயிலில் பாய்ந்து பொண்ணொருவர் உயிரிழப்பு

ஹப்புத்தளையில் ரயிலில் பாய்ந்து பொண்ணொருவர் உயிரிழப்பு

ஹப்புத்தளையில் ரயிலில் பாய்ந்து பொண்ணொருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 11:03 am

ஹப்புத்தளை மற்றும் இதல்கஸ்ஸின்ன ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தனது மகளுடன் ரயில் மார்க்கத்தில் பாய்ந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலில் நேற்றிரவு 8.45 அளவில் இந்த தாய் பாய்ந்துள்ளதாக ரயில்வே நிலைய ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மகள் தியத்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்க்கப்பட்டுள்ள மகளும் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்