ஹபராதுவ விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஹபராதுவ விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஹபராதுவ விபத்தில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 9:08 pm

ஹபராதுவ , கஹாவென்னாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பிறந்த நாள் வைபவத்தில் கலந்துகொண்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

காலி – மாத்தறை பிரதான வீதியின் கஹவென்னாகம பிரதேசத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு 10.15 மணியளவில் அஹங்கமவில் இருந்து காலி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது முச்சக்கர வண்டியில் 4 பேர் பயணித்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் 26 வயதுடைய அஷான் விராஜ், 26 வயதுடைய திலிப் லால் மற்றும் லஹிரு திஸ்னக்க ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்