ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்படுமா?

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்படுமா?

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை விதிக்கப்படுமா?

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 5:14 pm

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின்போது ரஷ்ய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்த சுயாதீன அறிக்கை ஒன்று இன்று வெளியாகவுள்ளது.

ஏமாற்று வேலை பெரிய அளவில் நடைபெற்றது என்றும், ரஷ்ய அரசின் ஆதரவோடு அது நடந்தது என்றும் மொஸ்கோவின் ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான ஆய்வகத்தின் முன்னாள் தலைவர் கிரிகொரி ராோட்சென்கோஃவ் எழுப்பிய குற்றச்சாட்டுக்களை இந்த அறிக்கை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் மூன்று வாரத்திற்கு குறைவான நாட்களில், ரியோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து, ரஷ்ய குழுவை முற்றிலுமாக தடை செய்ய, சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு இந்த அறிக்கை அழுத்தம் கொடுக்கலாம்.

ரஷ்யாவின் தடகள விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்