யாழ். பல்கலைக்கழக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 6:57 am

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியியேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவலையடைவதாகவும்வி தமிழ் தேசியக் கூட்டமைப்பு டுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சமூகங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக நாட்டில் இவ்வாறான விடயங்களை தடுக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவங்கள் மீள ஏற்படுவதை அனுமதிக்க கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களை வரவழைத்து பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் ஏனைய மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்