யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 1:40 pm

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று குழுவினால் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக நி்ர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய ஒழுக்காற்று குழுவின் அங்கத்தினருக்கு விசாரணைகளுக்கான கடிதங்கள் இன்று அனுப்பி வைக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் நேற்று முந்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலை அடுத்து நான்கு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்