English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
18 Jul, 2016 | 7:42 pm
நாட்டின் பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார். இதன்போது ஜனாதிபதி மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நல்லிணக்கம் தொடர்பிலான பாடத்தை நாட்டின் கல்வித்துறையில் உள்வாங்கி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதுடன், எமது கல்வித் திட்டம் மற்றும் கொள்கைகளில் நல்லிணக்கம் தொடர்பிலான பாடவிதானத்தை உள்வாங்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கவலையடைதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதுடன், அதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற ஒருபோதும் இடமளிக்க கூடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தமது உத்தியோகபூர்வ சேவைக் காலம் முடிவடைந்து இலங்கையில் இருந்து செல்லவுள்ள ஜேர்மன் தூதுவருக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.
05 Mar, 2020 | 07:20 PM
13 Mar, 2018 | 09:08 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS