மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் பிரதமர் இன்று பங்கேற்பு

மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் பிரதமர் இன்று பங்கேற்பு

மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் பிரதமர் இன்று பங்கேற்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 6:44 am

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டில் இன்று (18) கலந்துக் கொள்ளவுள்ளார்.

இந்த மாநாடு சிங்கப்பூரிலுள்ள ரெஃபல்ஸ் நகர மாநாட்டு மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.

21 ஆம் நூற்றாண்டில் உலக அரசியல் அரங்கில் தெற்காசியாவின் பங்களிப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினரின் உரையை நிகழ்த்தவுள்ளதாக சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் வீரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் ஜனாதிபதி டொ டெங் மற்றும் பிரதமர் லீ ஷியெங் லுங் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்