நாமல் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

நாமல் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

நாமல் ராஜபக்ஸ பிணையில் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 12:10 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

70 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்