நம்பிக்கையின் சுடர் பேரணி; ஐந்தாவது நாள் பயணம் வவுனியாவில் நிறைவு

நம்பிக்கையின் சுடர் பேரணி; ஐந்தாவது நாள் பயணம் வவுனியாவில் நிறைவு

நம்பிக்கையின் சுடர் பேரணி; ஐந்தாவது நாள் பயணம் வவுனியாவில் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 9:15 pm

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கை வீர வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையின் சுடர் பேரணி ஐந்தாவது நாள் பயணம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் மற்றும் நியூஸ் பெஸ்ட் ஏற்பாடு செய்துள்ள இந்த பேரணிக்கு, விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஒத்துழைப்பு வழங்குகின்றன.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் நம்பிக்கையின் சுடர் பேரணியின் பயணம் ஆரம்பமாகியது.

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நம்பிக்கையின் சுடர் ஏற்றப்பட்டது.

இதன்போது வடமாகாண விளையாட்டுத்துறை உதவிப்பணிப்பாளர், வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த வீளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

நம்பிக்கையின் சுடர் பேரணி ஏ9 வீதியூடாக ஆனையிறவு, கிளிநொச்சி ஊடாக வவுனியா நோக்கி பயணித்தது.

நம்பிக்கையின் சுடர் பேரணியின் இன்றைய நாள் பயணம் வுவனியாவில் நிறைவுபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்