டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jul, 2016 | 9:13 am

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 24,500 இற்கும் அதிகமானவர்கள், வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி மற்றும் மாத்தறை பகுதியில் அதிகளவானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெங்கு நுளம்பு பரவும் சூழல் காணப்படுமாயின் அதனை சுத்தப்படுத்தி டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு பொதுடமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்